நேபாளத்தில் தரையிறங்கிய விமானத்தில் தீ விபத்து!
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தின் டயரில் தீப்பிடித்ததால், விமான நிலையம் இன்று ஒரு மணி நேரம் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த 277 பயணிகள் அவசரகால வெளியேற்றம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர பூல் (Gyanendra Bhul) தெரிவித்துள்ளார்.
“விமானத்தின் வலது பின்புற டயரில் தீ விபத்து ஏற்பட்டது… தீ அணைக்கப்பட்டு, விமானம் ஓடுபாதைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தொழில்நுட்ப ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.




