உலகம்

கரோலினாவில் மோட்டார் சைக்கிள் பேரணி – 19 பேர் காயம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா – கரோலினாவில் நேற்று நடைபெற்ற வருடாந்திர மோட்டார் சைக்கிள் பேரணியில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பொலிஸாருடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.