மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – தாக்குதால்தாரி உள்பட மூவர் பலி
மொஸ்கோவில் பெண் ஒருவர் கொண்டுவந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குட்ரிங்க்ஸ்காயா (Kudrinkskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றப்போது பாதுகாப்பு ஊழியர் அவரை தடுத்ததாகவும், இதன்போதே வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் மொஸ்கோ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. […]






