இலங்கை செய்தி

சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலக்கிய, கலை வெளிப்பாட்டுச் சுதந்திரங்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது சட்டவல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கலைஞர் சங்கீதனை நேரில் சந்தித்து அவரது நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், இக்கைது நடவடிக்கை ஒருவருடைய அடிப்படை வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இதற்கு எதிராக மிக விரைவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!