இந்தியா செய்தி

இந்தியாவில் மிக நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்: சாதனை படைக்கிறார் மோடி!

இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை மக்கள் ஆணையுடன் பதவியில் நீடிக்கின்றார்.

இந்நிலையில் பதவியில் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பிரதமர் பதவியில் அவர் நிறைவு செய்யவுள்ளார்.

இதன்மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13ம் திகதி பதவியேற்று, மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடிக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நீண்ட, தொடர்ச்சியான பதவிக் கால சாதனையை பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த 2025 ஜூலை 25 ஆம் திகதி முறியடித்திருந்தார்.

இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை
தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார்.

மேலும் தொடர்ச்சியாக 2 முறை முழு பெரும்பான்மையுடன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

நேருவுக்குப் பிறகு பதவியில் இருக்கும் போதே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற முதல் பிரதமரும் இவரே ஆவார்.

அதேவேளை, குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என மோடியின் மொத்த பதவிக் காலம் 8,930 நாட்களை தாண்டியபோது, இந்தியாவின் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!