இலங்கை செய்தி

வடக்கு கல்வித்துறையை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!