இலங்கை செய்தி

திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் சந்தேக நபரை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (04) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர் என மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!