இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் போராட்டம்
யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டன. பருத்தித்துறை நகர பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், […]













