இலங்கை செய்தி

புங்குடுதீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!

  • June 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த மூன்று மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று மீனவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கரை திரும்பாமல் காணாமல்போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடற்றொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படையினர் தமது படகுகள் மூலம் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய ஆழ்கடல் […]

ஐரோப்பா செய்தி

1 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற குடும்பத் தலைவர் விபத்தில் பலி!

  • June 7, 2026
  • 0 Comments

பிரிட்டனின் Essex மாகாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த, மில்லியன் பவுண்டுகள் லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது Hit and Run (மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுதல்) விபத்தாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடந்த மே 21ஆம் திகதி காலை 6:30 மணியளவில், Tiptree பகுதியில் மிதிவண்டியில் (Bicycle) சென்று கொண்டிருந்த நபர் மீது கறுப்பு நிற Ford Ka ரக கார் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 30 வயது […]

உலகம் செய்தி

சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை டிரம்பை எதிர்க்கத் தயங்கி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ட்ரம்பின் முடிவுகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த குடியரசுக் கட்சியினரின் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. மேலும், உக்ரைனுக்கு […]

செய்தி விளையாட்டு

பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டு சீருடைகள் அங்கு வைக்கப்பட்டன. ஹாம்டன் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் இந்த அமைதிப் போராட்டம் அரங்கேறியது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் […]

இந்தியா செய்தி

சொத்துக்காக நேர்ந்த கொடூரம்: ஆஸ்திரேலிய கணித ஆசிரியர் இந்தியாவில் படுகொலை

  • June 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டு, கால்வாய் ஒன்றில் உடல் வீசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு தனக்குச் சொந்தமான முதலீட்டு நோக்கம் கொண்ட சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்பாடு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • June 7, 2026
  • 0 Comments

சொல்லிசைப் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளி ‘எக்கோ’ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத் […]

செய்தி விளையாட்டு

SL vs WI: மழை காரணமாக போட்டி ரத்து!

  • June 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் செயலுக்கு ஈரான் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

லெபனான் ராணுவத்தினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென்றே லெபனானின் இறைமையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்Esmaeil Baghaei பகாவி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் லெபனானின் அமைதி மற்றும் செழிப்பிற்கு எதிரான ஒரு தெளிவான ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் லெபனான் அரசுக்கும் ஈரான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை: பாலஸ்தீனம் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ஹுவாரா Huwara நகரில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்ததுடன், நகராட்சி கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்போடு இந்த அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டும் பாலஸ்தீனம், இது மக்களைத் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி என்று குறிப்பிடுகிறது. காசா போரின் பின்னணியில் இத்தகைய ராணுவ மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் […]