தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம் – மூவர் பலி
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள Kfar Tebnit மற்றும் Zebdin ஆகிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
லெபனான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும்,
எல்லையோரப் பாதுகாப்புப் பகுதிகளில் தங்களின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அதேபோல தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




