ஐரோப்பா செய்தி

உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!

ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதல்களின் போது Ust-Labinsk நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தங்களது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி Vladimir Zelenskyy விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்த அடுத்த நாளே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு பதில் நடவடிக்கை மட்டுமே என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி விவரித்துள்ளார்.

“நேற்று இரவு எமது ட்ரோன்கள் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் உள்ள எதிரியின் கடற்படை ஆயுதக் கிடங்குகள் மற்றும் குரோன்ஸ்டாட்டில் (Kronstadt) உள்ள தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளன” என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

புடினின் பேச்சுவார்த்தை மறுப்புக்கு பதிலளித்துள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர் , இனிவரும் நாட்கள் ரஷ்யாவிற்கு இன்னும் மோசமாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.

இதேவேளை, சனிக்கிழமை இரவு உக்ரைனின் Dnipropetrovsk பிராந்தியத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யப் படைகள் மூன்று மாவட்டங்களை இலக்கு வைத்து கிட்டத்தட்ட 30 தடவைகள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் பிராந்தியத் தலைவர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி