பாதுகாப்பு சீரான பின்னரே ரோஹிங்கியா அகதிகள் மீட்பு: மியான்மர் நிபந்தனை
பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ராகைன் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்ட பின்னரே அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷினால் சமர்ப்பிக்கப்பட்ட 8,28,824 பெயர்கள் அடங்கிய பட்டியலில், ஜூலை 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 3,08,797 பேர் ராகைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மியான்மர் வெளியுறவு […]













