ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்த இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் – 28 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அடங்கிய குழு எல்லையை கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நூரிஸ்தான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 28 போராளிகள் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிய ஆயுதக் குழுக்கள் அந்தப் போராளிகளுக்கு ஆதரவளித்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் என்றும் அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை பாகிஸ்தானின் தகவல் […]




