செய்தி

கார்க் தீவில் அமெரிக்கா குண்டுவீச்சு

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெட்ரோலிய உயிர்நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கொள்வனவாளரான சீனா, இந்தத் தீவிலிருந்தே எண்ணெயைப் பெற்றுக்கொள்கிறது. மேலும், கார்க் தீவு மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என […]

இலங்கை

45 ஈரான் மாலுமிகளின் உடலங்கள் தாய்நாட்டுக்கு!

  • March 13, 2026
  • 0 Comments

காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடலங்களும் மத்தல விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே, குறித்த […]

பொழுதுபோக்கு

போர் பதற்றம்: சென்னை திரும்பிய அஜித்!

  • March 11, 2026
  • 0 Comments

துபாயில் இருந்து நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் துபாயில் தங்கியிருந்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், சென்னை திரும்ப முடியாமல் அவர் துபாயில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், துபாயில் இருந்து அஜித் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துள்ளார். இது குறித்த காணொளிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.  

உலகம்

ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் 05 வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் அந்நாட்டு வீராங்கனைகள் 05 பேர் மௌனம் காத்துள்ளனர். இது ஈரான் அரசு ஊடகங்களால் “மிகப்பெரிய அவமானம்” என்றும், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது நாட்டில் […]

உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]