உலகம்

ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியா!

FILE – Iran players react during their national anthem ahead of the Women’s Asian Cup soccer match between Iran and the Philippines in Robina, Australia, Sunday, March 8, 2026. (Dave Hunt/AAPImage via AP,File)

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் 05 வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.

தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் அந்நாட்டு வீராங்கனைகள் 05 பேர் மௌனம் காத்துள்ளனர்.

இது ஈரான் அரசு ஊடகங்களால் “மிகப்பெரிய அவமானம்” என்றும், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக  இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர்.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், ஈரான் பெண்கள் கால்பந்து அணியின் தலைவி உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்