உலகம்

இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் 200 அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியுள்ளது.

மேலும் தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்