அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி
அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இறப்பு எண்ணிக்கை ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான் என்றும், இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
சட்ட அமுலாக்கப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறையில் ஒரு பெரியவரும் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பலியானோரின் எண்ணிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 16 வயது என தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை என்று பெண்ட் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷீலா மில்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




