ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

புடினின் அதிரடி முடிவால் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் ஆதரவினால் ரஷ்யாவுக்கும், குறித்த ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் ஆதரவினால் ரஷ்யாவுக்கும், குறித்த ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மன், சுவீடன் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் உள்ளூர் சொத்துக்களைத் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விளாமிடிர் புடின் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் பிரான்ஸ் தரையமைப்புத் தயாரிப்பு நிறுவனமான டார்கெட் (Tarkett), ஜெர்மன் பேக்கேஜிங் தயாரிப்பு நிறுவனமான மென்ஷென் (Menshen), சுவீடன் பேக்கேஜிங் நிறுவனமான ஸ்வெரிகே இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (Sverige International Holdings) மற்றும் டச்சு பேக்கேஜிங் நிறுவனமான சோனோகோ (Sonoco) ஆகியவற்றின் சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் உணவு நிறுவனமான நெஸ்ட்லே (Nestle) மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களான ஓஷான் (Auchan), மெட்ரோ (Metro) ஆகியவற்றிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்களிப்பிற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது “மீண்டும் மாற்றியமைக்கப்படக் கூடியதுதான்” என்றும் கிரெம்ளின் மாளிகை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சில ரஷ்ய சொத்துக்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கா கோரக்கூடும் என்ற தகவல்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி
வோலோடிமிர் செலென்ஸ்கி பங்கேற்பதற்கு முன்னதாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி