இந்தியா செய்தி

போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கானை நாடு கடத்துகிறது இந்தியா

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் அக்டோபர் 10-ம் திகதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI) அட்டை பெற்றுள்ள நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார்.

ஓசிஐ அட்டைதாரர்கள் இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கவோ, நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது. மேலும், இந்தியாவில் நிபந்தனையற்ற வகையில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் விதிகளை மீறிவிட்டதாக பாஜக தலைவர் கிரிட் சோமையா அளித்த புகாரின் பேரில், இம்ரான் கான் அக்டோபர் 28-ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியேற்றத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற நபர்கள் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விரும்புவதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கிரிட் சோமையா தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி