இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா செய்தி

2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது பிரதமர் மோடி கூறியவை வருமாறு , “சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும்.வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே […]

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா செய்தி

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 80வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் நாட்டுப்பற்றுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, […]

"மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது' இலங்கை செய்தி

“மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது’

  • August 15, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துகளை முன்வைக்கலாம்; ஆனால், அது தொடர்பாக வெளிநாடுகளால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளாரே?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “இலங்கை ஒரு சுதந்திர நாடாகும். எனவே, அரசியல் ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. ஆனால், […]

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

  • August 15, 2026
  • 0 Comments

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகின. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. […]

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியா செய்தி

BRICS மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்தின் போது, BRICS மாநாட்டில் பங்கேற்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பில் இந்தியா – ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துதல், சபாஹார் (Chabahar) துறைமுக திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் […]

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள […]

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது

  • August 14, 2026
  • 0 Comments

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 01 (தமிழ் மொழி) பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 12 விநியோக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தன. இதற்காக, கடந்த மே […]

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி" உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’:அமெரிக்காவிடம் ஈரான் விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி” என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar), அமெரிக்க தூதரக அதிகாரி (Chargé d’Affaires) நடாலி பேக்கரிடம் (Natalie Baker) தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இஷாக் […]

இலங்கை செய்தி

உணவுப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தீவிர மீளாய்வு

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி அதன் முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 554 எலும்புக் கூடுகள் அடையாளம்: 547 மீட்பு

  • August 14, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 52 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 07 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 106 […]