விறகு எடுக்கச் சென்ற மூவர் கைது!! காட்டுக்குள் உள் நுழைந்ததாக குற்றச்சாட்டு!!
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக உள்நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்று வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தின் போது தங்களது மூதாதேயர்கள் செய்து வந்த மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் விவசாய காணியை மீட்டுத் தருமாறு விவசாய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களை […]



