ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய மீன்பிடிக் கப்பல் – இருவர் மாயம்

  • August 30, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயில் நேற்று மீன்பிடிக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த படகில் 05 பேர் பயணித்த நிலையில் அவர்களில் மூவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான கப்பல் மற்றும் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் தோல்வி – ஒருவர் பலி

  • August 29, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில்  புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 110க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, நேற்றுக் காலை கிராவ்லைன்ஸ் Gravelines  பகுதியில் மீட்பு கப்பல் ஒன்றால் இனங்காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை தற்போது ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சிறிய படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு கடலோரக் காவல்படையினர் கூடுதல் விழிப்புடன் இருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஒரேநாளில் 230 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியா வருகை

  • August 10, 2026
  • 0 Comments

230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயை கடந்து இன்று அதிகாலை பிரித்தானியாவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணம் செய்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸ் கடற்கரைக்கு அப்பால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையில் படகு நுழைந்தபோது குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள தயாராக இருந்தது தெரியவந்துள்ளது. “இந்த சமீபத்திய சம்பவம், […]

ஐரோப்பா

சிறிய படகில் 128 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர் – சாதனைப் பதிவு

  • July 12, 2026
  • 0 Comments

கடந்த வெள்ளிக்கிழமை அன்று 128 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. ஒரே படகில் இப்பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும். வெள்ளிக்கிழமையன்று, மொத்தம் 225 புலம்பெயர்ந்தோர் மூன்று படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர். இந்த ஆண்டு இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 44% சரிவாகும். இந்த விடயம் தொடர்பில் உள்துறை அமைச்சகத்தின் […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு

  • June 16, 2026
  • 0 Comments

ரஷ்ய போர் கப்பல் ஒன்று ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல், வைட் தீவிலிருந்து சுமார் 20 கடல் மைல் தெற்கே எச்சரிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படகில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச் சூடு இங்கிலாந்தின் கடல் எல்லைக்கு வெளியே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பத்தை தொடர்ந்து ரோயல் படையின் HMS மெர்சி என்ற கப்பல் […]