ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு

ரஷ்ய போர் கப்பல் ஒன்று ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல், வைட் தீவிலிருந்து சுமார் 20 கடல் மைல் தெற்கே எச்சரிக்கைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் படகில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச் சூடு இங்கிலாந்தின் கடல் எல்லைக்கு வெளியே நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பத்தை தொடர்ந்து ரோயல் படையின் HMS மெர்சி என்ற கப்பல் ரஷ்யப் போர்க்கப்பலைப் பின்தொடர்ந்ததாகவு், HMS டைன் என்ற கப்பல், அந்தப் படகின் குழுவினரிடமிருந்து விவரங்களைச் சேகரிப்பதற்காக சென்றதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்