இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]



