உலகம் செய்தி

ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை (One-way attack drones) தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. Bandar Abbas தளத்திலிருந்து ஐந்தாவது ட்ரோன் ஏவப்படவிருந்த இறுதி நிமிடத்தில், அந்தத் தளம் […]

ஆஸ்திரேலியா செய்தி

IS அமைப்புடன் தொடர்புடைய பெண் கைது! 10 ஆண்டுகள் சிறை?

  • May 28, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட 34 வயது பெண்பெண்மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்பொன்றில் (IS) உறுப்பினராக இருந்ததோடு, தடை செய்யப்பட்ட போர்ப் பகுதிக்குள் அவர் நுழைந்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா திரும்பிய இவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ்(AFP) தெரிவித்துள்ளது. அவர் இன்று பிற்பகல் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான், குஜராத் அணிகள் நாளை பலப்பரீட்சை!

  • May 28, 2026
  • 0 Comments

IPL தொடரில் நாளை (29) நடைபெறும் 2 வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகார் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான் அணி வெற்றி: IPL இல் இருந்து வெளியேறியது Sunrisers Hyderabad!

  • May 28, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற விறுவிறுப்பான Eliminator ஆட்டத்தில், Sunrisers Hyderabad அணியை வீழ்த்தி Rajasthan Royals அணி Qualifier 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஹைதராபாத் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குவாரா ரணில்?

  • May 28, 2026
  • 0 Comments

” ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார், தேசிய அரசமையவுள்ளது என்றெல்லாம் வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ரணில் விக்கிரமசிங்க அல்ல, ஏனையோர்தான் இது பற்றி கருத்து வெளியிட்டுவருகின்றனர். ஐதேக தலைவராக நாட்டில் வகிக்க வேண்டிய உச்ச பதவியை அவர் வகித்துவிட்டார். […]

உலகம் செய்தி

20 விமான நிலையங்களை மீளக் கட்டியெழுப்பியது ஈரான்!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் Tabriz சர்வதேச விமான நிலையம் (Tabriz International Airport) மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. ஈரானின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதன்கிழமை முதல் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு ஈரானில் இயல்பு நிலைக்குத் திரும்பிய 20 ஆவது விமான நிலையமாக இது கருதப்படுகின்றது. ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை வென்றெடுக்க ‘கூட்டு அரசியல் சமர்’ முன்னெடுப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே எதிரணி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த வலியுறுத்தலை விடுத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா, ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழுக்கு முதலிடம்: மீனவர்கள் விடுவிப்பு! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

  • May 27, 2026
  • 0 Comments

“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் டெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

முப்படைகளை பலப்படுத்தவும்: பொன்சேகா அவசர அறைகூவல்!

  • May 27, 2026
  • 0 Comments

“பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. இராணுவம் வலுப்படுத்த வேண்டுமேதவிர, படை குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “எமது நாடு மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை சந்தித்த நாடாகும். அதேபோல வெளியக அழுத்தங்களும் வரக்கூடும். எனவே, பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. முப்படைகள் பலமாக இருக்க […]

உலகம் செய்தி

லாவோஸில் குகைக்குள் சிக்கிய ஏழு பேரில் ஐவர் உயிருடன் மீட்பு!

  • May 27, 2026
  • 0 Comments

லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகை ஒன்றிற்குள், கடந்த மே 20 ஆம் திகதி 7 பேர் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால் குகையின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால்பந்து […]

error: Content is protected !!