யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் களமிறங்குகிறது ஐரோப்பிய தூதுக்குழு

  • July 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் […]

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: சஜித் கூட்டணிக்குள் குழப்பமா?

  • July 18, 2026
  • 0 Comments

தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே செயற்பட்டு வருகின்றன. எமது தரப்புடன் அந்தக் கட்சிகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. தமது உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை […]

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. செய்தி விளையாட்டு

3ஆம் இடம் யாருக்கு? பிரான்ஸ் – இங்கிலாந்து மோதும் ‘கௌரவப் போர்’

  • July 17, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பிரான்ஸ் அணியின் கனவு, கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. மறுபுறம், இங்கிலாந்து அணி அதற்கு அடுத்த நாள் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்தைத் […]

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை செய்தி

‘காணி மீட்பு’- 13 ஆவது வாரமாக தொடரும் அறவழிப் போராட்டம்

  • July 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாகத் தொடரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 13 ஆவது வாரமாகவும் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கு, பலாலி மற்றும் மயிலிட்டிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

  • July 17, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், சிறைச்சாலை […]

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 11 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று முன்னெடுக்கப்பட்ட 35 வது நாள் அகழ்வுப் பணியின் போது, 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு மீட்கப்பட்டன. இதன்படி, இதுவரை 423 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான […]

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

  • July 17, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்றவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இன்று வெள்ளிக்கிழமை (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மீனவர் வீடு திரும்பாத நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியில் வசித்து வரும் முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி […]

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

பிரதி அமைச்சர் உட்பட அறுவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • July 17, 2026
  • 0 Comments

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மேலும் நால்வரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்த ஆறு சந்தேகநபர்களும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களில் பங்கேற்றமை மற்றும் சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாரச்சி, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் […]

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியா செய்தி

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • July 17, 2026
  • 0 Comments

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் […]

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கை செய்தி

வடக்கில் ஆடிப்பிறப்புப் பெருவிழா

  • July 17, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து […]