முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார். இலங்கை செய்தி

மிக் கொள்வனவு மோசடி: கோட்டாபயவிடம் விசாரணை

  • September 11, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் FCID இன்று முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அதேவேளை, மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலகவிடமும் நேற்று […]

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள், அத்துடன் பொருளாதார சவால்கள் முக்கியத்துவம் பெறவுள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகின்றது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை ஆக்கிரமிக்கவுள்ள “போர்கள்”

  • September 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர்கள், அத்துடன் பொருளாதார சவால்கள் முக்கியத்துவம் பெறவுள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை ஆரம்பமாகின்றது. புடின் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அதேவேளையில், இரண்டு நாள் கூட்டத்தின் இடையே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களை வரவேற்பதற்காக டெல்லி முழுவதும் மோடியின் சுவரொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் […]

காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரிய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?

  • September 11, 2026
  • 0 Comments

காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்… பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. இன்பங்களை விரும்புவதில் சளைக்காத அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்கள் தங்களது செல்வத்தைச் செலவிடுவதற்காகப் புதிய வழிகளை உருவாக்கி வருகிறார். சீனச் சுங்கத் தரவுகள் இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன. கடந்த தசாப்தத்தில் வடகொரியாவின் மசாஜ் உபகரணங்களின் இறக்குமதி 40 மடங்கு அதிகரித்துள்ளது. […]

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் குறித்து தேரர் பரபரப்பு கருத்து

  • September 11, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை நாம் வரவேற்கின்றோம். எனினும், நாட்டில் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகவே அவர் வந்திருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அவரது […]

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. இந்தியா செய்தி தமிழ்நாடு

முதலீடுகள் குறிவைப்பு: லண்டன் வந்தார் முதல்வர் விஜய்

  • September 11, 2026
  • 0 Comments

தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து மற்​றொரு விமானத்​தில் லண்​டன் சென்​றார். லண்​டனில் முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் தொடங்க வரு​மாறு அழைப்பு விடுக்க உள்​ளார். லண்​டனில் உள்ள […]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) மேடையில் ஏறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

மொட்டு கட்சியின் மேடையேறுவது ஏன்? அர்ச்சுனா விளக்கம்

  • September 11, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) மேடையில் ஏறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: “நாமல் ராஜபக்சவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையக்கூடும். ஆனால், அவர் 14 நாட்களில் வெளியே வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அநுராதபுரத்தில் எதிர்வரும் […]

பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார். இந்தியா உலகம் செய்தி

டெல்லியில் களமிறங்கினார் புடின்: மோடியுடன் இன்று முக்கிய பேச்சு

  • September 11, 2026
  • 0 Comments

பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார். பிரதமர் மோடியும் புடினும் கடந்த வாரம் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே கடைசியாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, ​​ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு, “முடிவில்லாத […]

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அல்ஜீரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடனான ராஜதந்திர உறவை துண்டித்தது அல்ஜீரியா

  • September 10, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தொடர்ச்சியான  பகைமை  நடவடிக்கைகளை அடுத்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அல்ஜீரியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும், இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் அல்ஜீரியா கையாண்டு முடித்துவிட்டதாகவும் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அல்ஜீரியாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் அமைச்சிற்கு வரவழைக்கப்பட்டு, இந்தத் தீர்மானம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், 48 […]

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா உலகம் செய்தி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்பு: உறுதிப்படுத்தியது சீனா

  • September 10, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பிலுள்ள பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், பெலாரஸ், பொலிவியா, […]

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

  • September 10, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]