இந்தியாவில் கொட்டி தீர்த்த பருவமழை – 19 பேர் பலி
இந்தியாவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் எட்டு பேரும், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் உயிரிழந்த 08 பேரில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜம்மு – காஷ்மீரில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.





