செய்தி

குஜராத், மும்பை அணிகள் இன்று மோதல்!

  • April 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 30 ஆவது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, டெல்லிக்கு எதிரான ‘திரில்’ வெற்றிக்குப் பிறகு அசுர பலம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளைத் துவம்சம் செய்த குஜராத் அணி, தற்போது ஹாட்ரிக் வெற்றிகளுடன் உத்வேகத்தில் உள்ளது. மறுபுறம், 5 முறை […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போரால் சரியும் ட்ரம்பின் செல்வாக்கு!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இழந்துவருகின்றார். NBC நடத்திய கருத்து கணிப்பில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. ஈரான்மீதானபோரை டிரம்ப் கையாண்ட விதம் காரணமாக அவரது ஆதரவு மதிப்பீடு 37 சதவீதமாகக் குறைந்துள்ளது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் அவரது செயல்பாடுகளை ஏற்கவில்லை என்பதுடன், நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வலுவான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர். அதேவேளை, பெரும்பாலான […]

இலங்கை செய்தி

திருமலையில் சோகம்!விபத்தில் இளைஞன் பலி

  • April 20, 2026
  • 0 Comments

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார். நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த திருகோணமலை -கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (47வயது) கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து […]

விளையாட்டு

லக்னோவை பந்தாடியது பஞ்சாப் கிங்ஸ்!

  • April 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் 54 ஓட்டங்களால் Punjab Kings அணி வெற்றிபெற்றுள்ளது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow Super Giants அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 […]

உலகம் செய்தி

ஈரான் கப்பலை சிறைபிடித்தது அமெரிக்கா!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன. இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது. ஈரான் மற்றும் […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட நுவரெலியா செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்புவார்.

உலகம் முக்கிய செய்திகள்

லூசியானாவில் துப்பாக்கிச் சூடு: 8 சிறுவர்கள் பலி

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். லூசியானாவின் தெற்கு ஸ்ரீவ்போர்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மூன்று வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து வாகனமொன்றைக் கடத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரைத் துரத்திச் சென்று சுட்டதில், அவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் சிலருக்கு குறித்த […]

இலங்கை

மலேசியாவில் தீ விபத்து: 200 வீடுகளுக்கு சேதம்

  • April 19, 2026
  • 0 Comments

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று (19) அதிகாலை இந்தத் தீ பரவியுள்ளது. இந்தத் தீ விபத்தினால் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • April 19, 2026
  • 0 Comments

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துள்ளார். பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா – இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbor First Policy) கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]