உலகம்

ஈரானின் ரேடார் தளங்கள் மீதான தாக்குதல் – விளக்கமளித்த அமெரிக்கா!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராணுவ மோதல்கள், பலவீனமான போர் நிறுத்தத்தத்தையே வெளிப்படுத்துகின்றன. இது மத்திய கிழக்கை நிலைப்படுத்துவதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியூடான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்குமான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும், பின்னர் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய கடலோர […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க போர் விமானங்களை துரத்திய பறக்கும் தட்டுக்கள் : UFO பற்றிய புதிய கோப்புகள் வெளியீடு!

  • May 22, 2026
  • 0 Comments

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) தொடர்பான கோப்புகளின் இரண்டாவது தொகுதியை பென்டகன் இன்று வெளியிட்டுள்ளது. இதில், வகைப்படுத்தப்படாத ஏராளமான புகைப்படங்கள்,  காணொளிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. 116 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில்,  1948 மற்றும் 1950-க்கு இடையில் நியூ மெக்சிகோவின் சாண்டியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகில் பதிவான ‘பச்சை நிற கோளங்கள்’, ‘வட்டுகள்’ மற்றும் ‘நெருப்புப் பந்துகள்’ போன்ற 209 முறை இனங்காணப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது. அத்துடன் இந்த சமீபத்திய வெளியீட்டில் […]

உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – அமெரிக்கா பற்றவைத்த நெருப்பு : தீயில் மூழ்கிய உலக நாடுகள்!! வெளியான கணிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ளது. மத்தியக்கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி முற்றுகையால்  விநியோக சங்கிலியில் தொடரும் சிக்கல்களை காரணம் காட்டி புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 2025இல்  மதிப்பிடப்பட்ட 3.0% உடன் ஒப்பிடுகையில், 2026-ல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதக் கணிப்பை விட 0.2 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், […]

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய அமெரிக்கா!! ட்ரம்பின் புதிய நகர்வு!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் வொஷிங்டனுக்கு  சமாதானத் திட்டமொன்ற அனுப்பியதை தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு புதிய சமாதானத் திட்டத்தை அனுப்பிய பிறகு, ”  ஈரான் மீதான தாக்குதலை நாங்கள் நடத்த மாட்டோம். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ஒரு நொடிப் பொழுதில் ஈரான் […]

உலகம்

அமெரிக்க இடைத் தேர்தல் – மக்களின் ஆதரவை பெற ட்ரம்ப் போடும் புதிய திட்டம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஈரான் போரினால் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக 18 சென்ட் கூட்டாட்சி எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எரிவாயு வரியை நீக்கப் போகிறோம், எரிவாயு விலை குறையும்போது, ​​அதை படிப்படியாக மீண்டும் அமல்படுத்துவோம்,’ என்று தெரிவித்துள்ளார். ஒரு கேலன் எரிவாயுவுக்கு 18.4 சென்ட் மற்றும் ஒரு கேலன் டீசலுக்கு 24.4 சென்ட் என்ற அளவில் […]

உலகம்

ட்ரம்பிற்கு எதிராக கூச்சலிடப்படும் எண்கள் – பின்னணி என்ன?

  • May 2, 2026
  • 0 Comments

விமானப்படை முன்னாள் வீரரும், புளோரிடாவின் 16வது மாவட்டத்தின் நாடாளுமன்ற வேட்பாளருமான மார்க் டேவிஸ், தனது பிரச்சாரத்தில் “8647” என்ற சொற்றொடரின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். “8647” என்ற எண்கள், அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் ஒரு பேரணி முழக்கமாக உருவெடுத்துள்ளன. இதில் “86” என்பது பொதுவாக ஒன்றை அகற்றுவதையும், “47” என்பது டிரம்பின் அதிபர் எண்ணையும் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. “86 47” இடம்பெற்ற இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ஜேம்ஸ் கோமி ( James Comey) மீது நீதித்துறை […]

உலகம்

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் திட்டங்களை வகுக்கும் அமெரிக்கா!

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட விளக்கங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் (Brad Cooper) மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரிடமிருந்து அவர் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது சாத்தியமான “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

உலகம்

அமெரிக்காவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் !

  • April 3, 2026
  • 0 Comments

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது. குறித்த விமானம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விமானம் வீழ்ந்து வெடித்த வேகத்தைப் பார்க்கும்போது, விமானி அதிலிருந்து வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

  • March 23, 2026
  • 0 Comments

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதுடன், வான்வெளிகள் அவ்வப்போது மூடப்படுவதால் சர்வதேச விமானப் பயணங்களில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலகங்கள் இலக்கு வைக்கப்படலாம் என இராங்காங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்கள் உலகம் முழுவதும் உள்ள […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஈரானின் நேரடி எச்சரிக்கை

  • March 22, 2026
  • 0 Comments

ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது இராணுவத் தளங்களை வழங்கவோ அனுமதிக்கும் நாடுகள், ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனத் தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, 48 மணித்தியாலத்துக்குள் […]