உளவு நடவடிக்கையில் AI தொழில்நுட்பம் – நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம்!
ஸ்கொட்லாந்தில் முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உளவுத் திட்டம் பயன்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் குற்றவாளிகளை கண்டறிவதற்காக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரகசியமாக பயன்படுத்தியது.
இதில் பாலியல் நோக்கங்களுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல ஆண்டுகளாக மெட் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வந்தது, கூடுதல் நேரப் பணிக்காகப் பொய்யான கோரிக்கைகளைப் பதிவு செய்தது, கூடுதல் விடுமுறை நாட்களைப் பெறுவதற்காக அமைப்புகளை ஏமாற்றுதல், வீட்டிலிருந்து வேலை செய்வதாகப் பொய் கூறுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 100 பேர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 615 பேருக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.





