உலகம்

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி!

  • June 8, 2026
  • 0 Comments

தனியார் ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா (La Romana International Airport) சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில்  விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த அவசரநிலை […]

இலங்கை

நாவலப்பிட்டியவில் சோகம் : முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்து விபத்து – மூவர் பலி!

  • June 4, 2026
  • 0 Comments

நாவலப்பிட்டிய -மாபகந்த பகுதியில் மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவர், அவருடைய தாய் மற்றும் மற்றொரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டி ஓட்டுநர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த மரம் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த மரம்  சில காலமாக அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முன்னரே […]

உலகம்

இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் […]

இந்தியா

டெல்லியில் பற்றி எரிந்த உணவகம் : 20 பேர் உயிரிழப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

டெல்லியில் பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏறக்குறைய 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த தீவிபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 04 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 08 பேர் சிசிக்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி (DDMA) துணை மாவட்ட ஆட்சியர் (SDM) ஜிதேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் மேல் தளங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் […]

உலகம்

தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

இலங்கை

தானசாலையில் வரிசையில் இருந்த மக்கள் மீது மோதிய கார்!! 06 பேர் உயிரிழப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

மீகொடவில்  வெசாக்கை முன்னிட்டு தானம் பெற காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவெலவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று, மீகோடா சந்தியில்  தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது  வரிசையில் இருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 […]

உலகம்

பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!

  • May 25, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]

இலங்கை

ரயில் தடம் புரண்டு விபத்து – 12 பேர் காயம்!

  • May 16, 2026
  • 0 Comments

வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலே இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். அதேநேரம் படுகாயமடைந்த பயணி ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

மெக்சிகோவில் பாரிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்தனர். அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் […]