இலங்கை

தானசாலையில் வரிசையில் இருந்த மக்கள் மீது மோதிய கார்!! 06 பேர் உயிரிழப்பு!

மீகொடவில்  வெசாக்கை முன்னிட்டு தானம் பெற காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவெலவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று, மீகோடா சந்தியில்  தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது  வரிசையில் இருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் பாதுக்கவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும், பிலியந்தலாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

வாடகைக் காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்