செய்தி விளையாட்டு

இந்திய அணியில் திடீர் மாற்றம்: புதுமுக பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அவ்கிப் நபி (Auqib Nabi) இணைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அவ்கிப் நபி (Auqib Nabi) இணைக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) இன்று (31) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

29 வயதான அவ்கிப் நபி, ஆரம்பத்தில் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மாத்திரமே இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், தற்போது முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலும் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தொடைத் தசை உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான அவ்கிப் நபி, தற்போது தொடரின் ஆரம்பம் முதலே அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் 15ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
– சுப்மன் கில் (அணித்தலைவர்)
– ரோஹித் சர்மா
– விராட் கோலி
– ஸ்ரேயாஸ் ஐயர்
– கே.எல். ராகுல்
– அக்சர் படேல்
– நமன் தீர்
– அன்ஷுல் கம்போஜ்
– குர்னூர் பிரார்
– ருதுராஜ் கெய்க்வாட்
– அர்ஷ்தீப் சிங்
– இஷான் கிஷன்
– மொஹமட் சிராஜ்
– குல்தீப் யாதவ்
– நிதிஷ் குமார் ரெட்டி (முதல் போட்டிக்கு மாத்திரம்)
– அவ்கிப் நபி

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி