இந்தியா செய்தி

பாட்டியை நினைத்து உருகிய ராகுல் காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 42 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பேரனும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 42 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பேரனும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் சிறுவயதில் தனது பாட்டி இந்திரா காந்தியுடன் இருக்கும் புகைப்படமொன்றைப் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அவருடன் கழித்த அழகான தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில்,

“உங்கள் மடியில் அமர்ந்து, உங்கள் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, நீங்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருப்பேன். நீங்கள் சொல்வதைப் பின்தொடர்ந்து நானும் உச்சரிப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யஜுர் வேதத்தில் இடம்பெற்றுள்ள சாந்தி மந்திரத்தையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

“அசதோ மா சத்கமய, தமசோ மா ஜோதிர்கமய, ம்ருத்யோர் மா அம்ருதம் கமய” என்ற அந்த மந்திரம், பொய்மையிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருநிலைக்கும் வழிநடத்த வேண்டும் என்ற பொருளைக் கொண்டுள்ளது.

இதனைத் தனது பாட்டி தனக்குக் கற்றுக்கொடுத்த அழகான பரிசாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, “பாட்டி, நீங்கள் எனக்கு எவ்வளவு அழகான பரிசை வழங்கியுள்ளீர்கள். இத்தகைய ஒரு பரிசை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வதேராவும் தனது பாட்டி இந்திரா காந்தியுடன் இருக்கும் சிறுவயதுப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

“அவர் எவ்வளவு அழகான பெண்! வானத்தைப் போன்று சுதந்திரமானவர், கடலைப் போன்று ஆழமானவர், பூமியைப் போன்று உறுதியானவர், நெருப்பைவிடப் பிரகாசமானவர்” எனப் பிரியங்கா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 42ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி