இலங்கை: சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு
Remand of seven arrested in illegal pyramid scheme extended in Sri Lanka:
கடந்த வாரம் பிரமிட்(Pyramid) திட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் நவம்பர் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த 7 நபர்களும் அக்டோபர் 23ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 40 முதல் 64 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை(Ratmalana), பன்னிப்பிட்டிய(Pannipitiya), கல்னேவ(Kalnewa), ஹோகந்தர(Hokandara), பேராதனை(Peradeniya) மற்றும் கொழும்பு 04(Colombo 04) ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





