கீவில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் – குறைந்தது 09 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டிடத்தின் கீழ் தளங்கள் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் நகரம் முழுவதும் உள்ள கிடங்குகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தி, சேதத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கீவில் இந்தவாரம் நடத்தப்பட்ட இரண்டாவது கொடிய தாக்குதலாக இது பதிவாகியுள்ளது. அத்துடன் நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




