ஐரோப்பா

ஸ்பெயினில் அதி வெப்பமான காலநிலை ஏப்ரலில் பதிவு!

ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம்  மிகவும் வரண்ட வெப்பமான வானிலை பதிவாகியதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 1961 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதமே அதிகளவிலான வறண்ட காலநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் AEMET எனப்படும் மாநில வானிலை ஆய்வு நிறுவனம், வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை, 14.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

அதேநேரம்  மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 4.7 செல்சியஸ் அதிகரித்துள்ளதாக AEMET தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையில் ஐந்தில் ஒரு பங்கு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்கள் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பநிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டை அதிகாரப்பூர்வமாக நீண்ட கால வறட்சிக்குள் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்