செய்தி விளையாட்டு

SLvsENG – 196 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

லார்ட்ஸில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆட்டத்தின் முதலாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 427 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் சதம் அடித்து அணியை வலுப்படுத்தினர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அஷித பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலே தடுமாறிய நிலையில் சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் அட்கின்சன், வோக்ஸ், ஸ்டோன், பொட்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இலங்கையை விட 231 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இலங்கை அணியை விட 256 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content