விளையாட்டு

டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த கதி

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அப்போது, 13.5வது ஓவரில், டேவிட் பந்தை வேகமாக மடக்கி சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸரை மைதானத்தில் போட்டியை ரசித்து கொண்டு இருந்த டெல்லி ரசிகர் ஒருவர் பந்தை பிடிக்க முயற்சி செய்தார்.

ஆனால், அந்த பந்து மிகவும் வேகமாக வந்த காரணத்தால் அவருடைய கைகளில் படாமல் முகத்தில் வேகமாக பட்டு காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து முகத்தில் கை வைத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

மேலும், போட்டியை பொறுத்தவரையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ