பொழுதுபோக்கு

திடீரென Bar-ஐ தேடி ஓடிய மீனா… பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி

சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு TRP-யில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் ‘சிறகடிக்க ஆசை’.

தற்போது சிட்டியின் சதி வலையில் சிக்கி முத்து அவதிப்படும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

முத்து குடித்து விட்டு, கஸ்டமரை காரில் ஏற்றி செல்கிறார் என திட்டம் போட்டு ஒரு பொய்யான வீடியோயோவை வெளியிட, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து முத்துவின் காரை போலீசார் எடுத்து சென்று விடுகின்றனர்.

அண்ணாமலையும் உண்மை தெரியாமல் முத்துவை அடித்து அசிங்கப்படுத்த மனோஜிக்கும், ரோகிணிக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.

மீனாவும் முத்த குடித்தார் என நம்பி அவரை கண்டபடி திட்டி விடுகிறார். பின்னர் முத்து 12 மணிக்கு குடிக்க மாட்டார் என்பதும், இதில் யாருடைய சதியோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு முத்துவை காப்பாற்ற பாருக்கு சென்று, ஓனரிடம் அனுமதி வாங்கி CCTV காட்சியை பார்க்கிறார். அதில் முத்து குடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

பின்னர் காவல் நிலையத்திற்கு அந்த காட்சிகளுடன் வந்து தன்னுடைய கணவர் ஒரு நிரபராதி என்பதை மீனா நிரூபிக்க, தன்னுடைய கணவரை தவறாக நினைத்ததை எண்ணி முத்துவை கட்டிப்பிடித்து அழும் காட்சி தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்