நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
குறித்த வழக்கு கடந்த 13 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்டு, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய, அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.




