ஐரோப்பா

பிரான்ஸை ஆக்கிரமித்துள்ள கலவரங்கள் – குடிமக்களை எச்சரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

பிரான்ஸில் அமைதியற்ற சூழல் நிலவிவருகின்ற நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்களின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.

அதிகரித்த விலைகள் மற்றும் குறைந்து வரும் பொது சேவைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட அமைதியான போராட்டங்கள் கடந்த சனிக்கிழமை வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து கலவரங்கள் வெடித்துள்ளன.

மக்களின் கடைகள் சூறையாடப்பட்டு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல ஈழத்தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பிரான்சுக்கு பயணம் செய்யும் குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தியுள்ளன.

இதற்கமைய

இத்தாலி

தங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய ஏதுவாக, பிரான்சில் தாங்கள் இருப்பதை ஒரு இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அவர்களை எச்சரித்தது.

ஜெர்மனி

வரும் நாட்களில் மேலும் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் கூறியதுடன், உள்ளூர் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டங்களிலிருந்து வெளியேறுமாறும், அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அபராதம் அல்லது இழப்பீடு கோரல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செக் குடியரசு

பிரான்சில் உள்ள செக் நாட்டினர் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என CTK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்சில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதாக செக் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலந்து

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று போலந்து தனது நாட்டு வழிகாட்டுதலில் கூறியுள்ளது.

நெதர்லாந்து

அக்டோபர் 7 அன்று கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட ஓர் ஆலோசனையில், பிரான்சுக்குச் செல்லும் பயணிகள் போராட்டங்களைத் தவிர்க்குமாறு டச்சு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

நார்டிக் நாடுகள்

டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள், பிரான்சில் உள்ள தங்கள் குடிமக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தி ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்