ஐரோப்பா

பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும் – ட்ரம்ப் சர்ச்சை கருத்து

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெறும் போராட்டங்களுக்கு, அமெரிக்க அதிபர் ஈரான் மீது தொடுத்துள்ள போரே காரணம் என்றும், அதுவே உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என்றும் மக்ரோன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பாரிஸ் நகரம் “மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியேற்றக் கொள்கையே இந்த அமைதியின்மைக்குக் காரணம் என்று கூறியுள்ள அவர்,  பிரான்சின் எல்லைகளை மூடிவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே பிரான்சில் நடைபெறும் போராட்டங்களுக்கு, அமெரிக்க அதிபர் ஈரான் மீது தொடுத்துள்ள போரே காரணம் என்றும், அதுவே உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது என்றும் மக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்