உலகம் செய்தி

ஈரானின் அணுசக்தி தொடர்பான தகவல்களுக்கு வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் அணுசக்தி தொடர்பான தகவல்களுக்கு வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம் தீவு (Qeshm Island) மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம் தீவு (Qeshm Island) மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது அமெரிக்கப் படைகள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கெஷ்ம் தீவின் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ரக ஆளில்லா விமானத்தை ஈரானிய வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்சியான IRIB, இராணுவ அறிக்கையை மேற்கோள்காட்டித் தெரிவித்துள்ளது.

கெஷ்ம் தீவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM), அப்பகுதியில் நிலைமை ஒப்பீட்டளவில் அமைதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வெகுமதியும், தேவையேற்பட்டால் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், உபகரணங்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட தொடர்புடைய நபர்கள் மற்றும் அவற்றின் நகர்வுகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கே இந்தச் சலுகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி