ஐரோப்பா

NHS அறக்கட்டளையின் அலட்சியம் – 315இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிழையான சிகிச்சை

பிரித்தானியாவின் NHS அறக்கட்டளைகள் பிழையான சிகிச்சைகளை வழங்கியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

20 பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், குறிப்பிடத்தக்க சிகிச்சைக் குறைபாடுகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2023 மற்றும் 2025-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட    514 வழக்குகளை ஆய்வு செய்ததில்,  315 நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில், 77 பேர் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் மேலும் சில வழக்குகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நோயாளி டெனிஸ் ஹோவர்த் Denise Howarth , தனது மார்பக அறுவை சிகிச்சை தேவையற்றது என்று கூறப்பட்டதால் ஏற்பட்ட ஆழ்ந்த உடல் மற்றும் உளவியல் தாக்கத்தை விவரித்தார்.

தனது அடையாளத்தையே பறித்துவிட்டதாகவும், வாழ்க்கையையே மாற்றியமைத்த அந்தத் தவறுக்கு ஒரு மன்னிப்பு போதுமானதல்ல என்றும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்