Tamil News

விஜய் படத்தை இயக்க மறுத்த லவ் டுடே நாயகன் பிரதீப்….

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

கடந்த 2022 ஆண்டு லவ் டுடே படத்தை இயக்கி நடித்து பிரதீப் ரங்கநாதன் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருவதால் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

 

Exit mobile version