இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்குகிறது ஐக்கிய அரபு அமீரகம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது.

பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் அகஸ்தீர் வான்பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை விற்பனை செய்வது தொடர்பில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா பேச்சு நடத்திவருகின்றது.

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கின்றன.

அதிவேகத்தில் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை நிலப்பகுதியிலிருந்தும், கடலில் இருந்தும், வானில் இருந்தும் ஏவ முடியும்.

இந்தியாவிடம் இருந்து முதன் முதலில் பிரமோஸ் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு பிலிப்பைன்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது.

இதனால் பிரம்மோஸ் ஏவுகணை பிரபலமடைந்து வருகிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

ஈரான் போரை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், அகஸ்தீர் வான் பாதுகாப்பு கருவிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி