இத்தாலியில் வன்முறைகளை கட்டுப்படுத்த சிறுவர்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டம்
இத்தாலியில் பல வாரங்களாக நீடித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டநடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அனுமதியளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையின் கீழ், 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதற்கு ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தாலும், அவர்களை 12 மணி நேரம் காவல் நிலையங்களில் தடுத்து வைக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினி Matteo Salvini கூறியுள்ளார்.
இதற்கிடையே வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களில் மேலும் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக மிலனில் கூடுதலாக 500 இராணுவ வீரர்களை நிலைநிறுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது
மோசமான பொதுச் சேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு எதிராக ஆரம்பத்தில் அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தற்போது வன்முறையாக வெடித்துள்ளன.
முகமூடி அணிந்த பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளை சூறையாடியுள்ளனர். அவர்களில் பலர் சிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மெலோனி தொடர்ச்சியான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




