பொழுதுபோக்கு

மீண்டும் அறிக்கை வெளியிட்டார் நயன்… தனுஷூக்கு மட்டும் அப்படி ஒரு இடம்

ஏற்கனவே நயன்தாரா டாக்குமென்டரி படம் ரிலீஸ் ஆக இருக்கும் முந்தைய நாளில் தனுஷை வம்புக்கு இழுத்து நான்கு பக்கம் அறிக்கை விட்டு சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட்டார்.

போதாத குறைக்கு டாக்குமென்டரி படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

தன்னுடைய அனுமதி இல்லாமல் நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட மூன்று செகண்ட் வீடியோவை பயன்படுத்தியதால் ஒரு தயாரிப்பாளராக நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் தனுஷ்.

அதில் 24 மணி நேரத்திற்குள் அந்த வீடியோவை நீக்காவிடில் 10 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவை நீக்காமலேயே டாக்குமென்ட்ரி படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.

சமூக வலைத்தளத்திலும் நெகட்டிவ் பாசிட்டிவ் என மொத்தத்தையும் பேசி தீர்த்து விட்டார்கள்.

நானும் ரவுடிதான் சம்பந்தப்பட்ட வீடியோவுக்காக தனுஷின் NOC கேட்கப்படவில்லை என அவருடைய அப்பா கஸ்தூரிராஜா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய மகனுக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும் இது போன்ற விஷயத்தில் எல்லாம் அவரால் கவனம் செலுத்த முடியாது எனவும் சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய அறிக்கையில்,

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா மொழியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சிலர் அது பெயரை குறிப்பிட்டு தன்னுடைய டாக்குமென்டரி வீடியோவில் அவர்கள் தயாரித்த படத்தின் காட்சிகளை உபயோகப்படுத்த அனுமதி கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி என லிஸ்ட் போட்டு இருக்கிறார். இதில் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் தனுஷை சீண்டிப் பார்த்திருக்கிறார் நயன்தாரா.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்